என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » நடிகர் சல்மான்
நீங்கள் தேடியது "நடிகர் சல்மான்"
இந்தூர் மேயர் தேர்தலைப்போல் பாராளுமன்ற தேர்தலிலும் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து சல்மான் கான் பிரசாரம் செய்வார் என வெளியாகும் தகவல்களுக்கு அவர் பதில் அளித்துள்ளார். #SalmanKhancampaign #LSpolls #Indorepolls
மும்பை:
பிரபல பாலிவுட் நடிகர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ள சல்மான் கான் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்று அவ்வப்போது சில கருத்துகளை வெளியிட்டு வருகிறார்.
மத்தியபிரதேசம் மாநிலத்தில் உள்ள இந்தூர் நகரம், பலாசியா பகுதியை சேர்ந்த சல்மான் கான் கடந்த 2009-ம் ஆண்டில் நடைபெற்ற இந்தூர் நகர மேயர் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் பங்கஜ் சங்கவி என்பவருக்கு ஆதரவாக பிரசாரம் மேற்கொண்டார். ஆனால், அந்த தேர்தலில் பாஜகவை சேர்ந்த கிருஷ்ணா முராரே மோகே வெற்றிபெற்று மேயரானார்.
இந்நிலையில், மத்தியபிரதேசம் மாநிலத்தில் ஏப்ரல் 29-ம் தேதி தொடங்கி நான்கு கட்டங்களாக பாராளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது.
இந்த தேர்தலில் இந்தூர் தொகுதி வேட்பாளரை ஆதரித்து நடிகர் சல்மான் கான் பிரசாரம் செய்வார் என்று மத்தியபிரதேசம் மாநில காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் பங்கஜ் சதுர்வேதி சமீபத்தில் தெரிவித்திருந்தார்.
மத்தியப்பிரதேசம் மாநிலத்தின் மிகப்பெரிய நகரமான இந்தூர் பாராளுமன்ற தொகுதி கடந்த 1989-ம் ஆண்டு முதல் பாஜகவின் கோட்டையாக இருந்து வருகிறது. இந்த தொகுதியில் 8 முறை போட்டியிட்டு வெற்றிபெற்ற பாராளுமன்ற சபாநாயகர் சுமித்ரா மகாஜன் இந்த முறையும் இங்கு களமிறங்க உள்ளதாக தெரிகிறது.
அவரை வீழ்த்த சல்மான் கானின் பிரசாரத்தை காங்கிரஸ் நம்பியுள்ள நிலையில் இந்த தேர்தலில் நான் எந்த கட்சி சார்பில் போட்டியிடப் போவதில்லை. பிரசாரம் செய்யவும் மாட்டேன் என தனது டுவிட்டர் பக்கத்தில் சல்மான் கான் இன்று விளக்கம் அளித்துள்ளார். #SalmanKhancampaign #LSpolls #Indorepolls
நடிகர் சல்மான்கானை கொலை செய்வதற்கு திட்டமிட்டிருப்பதன் எதிரொலியாக அவரது வீடு மற்றும் படப்பிடிப்பு தளங்களில் போலீசாரின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. #SalmanKhan
மும்பை:
ராஜஸ்தானை சேர்ந்த பயங்கர ரவுடியான லாரன்ஸ் பிஸ்னோயின் உதவியாளர் சம்பத் நெஹ்ராவை அரியானா மாநில சிறப்பு அதிரடி போலீசார் சமீபத்தில் கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்தியபோது, நடிகர் சல்மான்கானை கொலை செய்வதற்கு லாரன்ஸ் பிஸ்னோய் திட்டமிட்டு இருப்பது தெரியவந்தது.
இதற்காக லாரன்ஸ் பிஸ்னோயின் பிற கூட்டாளிகள் மும்பைக்கு சென்றிருக்கலாம் என கருதும் அரியானா போலீசார், இது தொடர்பாக மராட்டிய போலீசாரை எச்சரித்துள்ளனர். இதைத்தொடர்ந்து சல்மான்கானின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது.
அதன்படி அவரது வீடு மற்றும் படப்படிப்பு தளங்களில் ஆயுதம் ஏந்திய போலீசார் நிறுத்தப்பட்டு உள்ளனர். மேலும் அவரது பாதுகாப்புக்காக சிறப்பு மெய்க்காப்பாளர்களும் நியமிக்கப்பட்டு உள்ளனர். #SalmanKhan #Tamilnews

×

X